• Aug 12 2025

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித் குமார். திரையுலக பிரமாண்டங்களை பின்னுக்கு தள்ளி, தனது heart beat ஆக இருப்பது ரேஸிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.


தற்போது, அவரது ரேஸிங் அணி, உலகளாவிய ரேஸிங் போட்டிகளில் மிகச் சிறந்த புரட்சியை செய்துள்ளது. "க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப்" போட்டியில் "Pro-Am" பிரிவில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது.

க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப் என்பது ஐரோப்பா வட்டாரங்களில் மிகப்பெரிய கார் ரேஸிங் போட்டிகளில் ஒன்றாகும். இதில் பங்கு பெறுவதே ஒரு சாதனை. அந்தவகையில் அஜித் குமார் அணியின் வெற்றி, இந்தியாவின் ரேஸிங் வரலாற்றையே தொட்டெழுப்பும் அளவுக்கு பேசப்படுகிறது.


இந்த வெற்றி மூலம் அஜித் குமாரின் புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. திரைத்துறையை தாண்டி, இந்தியாவை உலக ரேஸிங் மேடையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர் எடுத்திருக்கும் புது வழி இது. இத்தகவல் வெளியானதிலிருந்து அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement