• Jul 16 2025

தக் லைப் பிளாப் விவகாரம்.."எங்களை மன்னித்துவிடுங்கள்" - மணிரத்னம் உருக்கம்..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த 'தக் லைப்' திரைப்படம் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியானது. 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி திரும்ப வந்துள்ள இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலீசான நாளிலேயே பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தமையால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வருவாயை பெற முடியவில்லை.


இந்த நிலையில் படத்தின் பிளாப் குறித்து மணிரத்னம் முதன்முறையாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தி பேசியுள்ளார்.அதாவது "எங்கள் இருவரிடமும் இன்னொரு நாயகன் படம் எதிர்பார்த்தவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான் எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் முற்றிலும் வேறு ஒன்றை செய்ய நினைத்தோம். இது ஓவர் எதிர்பார்ப்பைத் தாண்டி வேறு விதமான எதிர்பார்ப்பு." என கூறியுள்ளார்.


இந்த உருக்கமான பதிலால் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் கலந்துரையாடல்கள் உருவாகி வருகின்றன. "தக் லைப்" எனும் முயற்சி தோல்வி என்றாலும் படம் சொல்வதைக் கவனிக்க வேண்டும் என்ற கருத்தும் சிலரிடம் இருந்து வெளியாகி வருகிறது.

Advertisement

Advertisement