• Jul 11 2025

"திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்?" – 41 வயதிலும் திருமணத்தைத் தள்ளி வைத்த நடிகை..

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு சினிமாவை தன் அழகும் நடிப்பாலும் ஒருகாலத்தில் கலக்கிய நடிகை சதா தற்போது தனது தனித்துவமான வாழ்க்கைத் தேர்வுகள் மூலம் மீண்டும் பேசப்படும் நிலைக்கு வந்துள்ளார்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் 41 வயதிலும் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை? என்ற கேள்விக்கு சதா துணிச்சலான பதிலை அளித்துள்ளார்.


அதாவது "திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்? திருமணத்தின் மீது எனக்கு ஆசையும் இல்லை, நம்பிக்கையும் இல்லை. புகைப்படத் துறையில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அதற்குப் பிறகு தான் திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்" என கூறியுள்ளார்.


இந்த திறமையான தன்னம்பிக்கை மிகுந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றது. 

Advertisement

Advertisement