• Aug 08 2025

"மாமன்" படத்தை இப்போது OTT இல் ரசிக்க தயாராகலாம்..! வெளியீட்டு தேதி இதோ..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாகவும் தனக்கென ஒரு நிலை பெற்றுள்ளவர் நடிகர் சூரி. அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாமன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.


'விலங்கு' வெப் சீரீஸில் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கிய இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சுவாசிகா நடித்துள்ளனர். அக்கா-மகன் பாசத்தை மையமாக கொண்டு உருவான இந்த குடும்ப உணர்வுப்பூர்வ படம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது.


ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.35 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட 'மாமன்' தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படம் ஜூன் 27ம் தேதி ZEE5 தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement