தமிழ் சினிமாவின் தல என்று அழைக்கப்படும் அஜித் குமார், சில நேரங்களில் மட்டுமே தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணத்தை குறித்து பேட்டிகளில் பகிர்ந்து கொள்வார். சமீபத்திய ஒரு பேட்டியில், அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தனது வாழ்க்கையை மாற்றியவர் என்ற உணர்ச்சிகரமான கருத்தை பகிர்ந்துள்ளார். மேலும் "என் வாழ்க்கையை மாற்றியது ரஜினி சார் தான்" என அஜித் எமோஷனலாக கூறியதுடன் தனது வாழ்க்கையில் இருந்த கடினமான தருணங்கள் பற்றியும் பேசினார்.
அஜித் அதில் கூறுகையில் , "என் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியவர் சூப்பர் ஸ்டார் தான். என்னை அவர் அறியவைத்ததுடன் பல பிரச்சனைகள் மற்றும் குழப்பங்களைக் கடந்து வருவதற்கு " லிவிங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்" என்ற புத்தகத்தையும் கொடுத்தார். அந்தப் புத்தகம் என் வாழ்க்கையை மாற்றியது என்றும் கூறினார்.
இந்த வார்த்தைகள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெரிதும் கவர்ந்துள்ளன. இது அஜித்தின் அடையாளத்தை உருவாக்கிய ஒரு முக்கியமான சம்பவம் என்பதும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. முதலிலிருந்து, அஜித் குமார், ரஜினிகாந்தை மிகவும் மதிக்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இரண்டு பேருக்கும் இடையே ஒரு ஆழ்ந்த மரியாதை காணப்படுகின்றது.
மேலும், ரஜினிகாந்த் பல முறை அஜித்தின் எளிமையைப் புகழ்ந்து பேசியுள்ளார். இதற்கு முன்பு, ரஜினிகாந்தின் ஒரு ஆலோசனை, அஜித்தின் வாழ்க்கையை மாற்றியதாக அவர் பலமுறை கூறினார். ரஜினி கொடுத்த அந்தப் புத்தகம், மனதின் அமைதியை கண்டுபிடித்தல் மற்றும் சாதனைகளில் நம்பிக்கையுடன் இருப்பது போன்ற விஷயங்களை விளக்குகிறது. இந்தப் புத்தகமே தனது வாழ்க்கையை மாற்றியதாகக் கூறிய தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!