தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான "டிராகன்" திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்த கயாடு, அவரது கதாபாத்திரத்தாலும், நடிப்பாலும் அதிகம் பேசப்பட்டு வருகின்றார். குறிப்பாக, அவரது சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பாக ட்ரெண்டாகி வருகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கயாடு, நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அவரது அதிர்ச்சியூட்டும் வகையில் பல கருத்துக்களை கூறினார்.
அவர் அதில் கூறியதாவது, "எனக்கு கெட்ட பசங்களை தான் பிடிக்கும். ஏனென்றால், கெட்ட பசங்கள் நல்ல பசங்களாக மாற்றுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றதுடன் அப்படியே ஆரம்பத்திலேயே நல்லவனாக இருந்தாலும், அவனை கெட்டவனாக மாற்றிடுவேன்!" என்றார். இதனை கேட்ட ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள், இது கயாடு தனது தனிப்பட்ட பார்வையை பகிர்ந்ததாக இருக்கும் என்று கருதிவருகின்றனர்.
சாதாரணமாக, தமிழ் சினிமாவில் நாயகிகள் "நல்லவர்களை" விரும்புவார்கள் என்று தான் காட்டப்படும். ஆனால், கயாடு கெட்டவர்களை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன் என்ற கருத்து புதிய கோணத்தை உருவாக்கியுள்ளது.
Listen News!