• Oct 01 2026

GV பிரகாஷ் படத்துக்கு இப்படியொரு வரவேற்பா? ‘இம்மார்ட்டல்’ பட 4ம்நாள் வசூல் இத்தனை கோடியா?

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த ஜி.வி. பிரகாஷ் குமார், ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது ‘இம்மார்ட்டல்’ திரைப்படமும் இணைந்துள்ளது.


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, படத்தின் ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகளவில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்களை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

தற்போது ரூ.7 கோடியை கடந்துள்ள இப்படத்தின் வசூல், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement

Advertisement