• Sep 08 2026

OTT-யில் சூர்யாவை பார்க்க ரெடியா? வெளியானது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட ரிலீஸ் அப்டேட்.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


படத்தின் கதைக்களத்தில், 40 வயதான தொழிலதிபராக சூர்யா நடித்துள்ளார். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அவருக்கு, அந்தக் குழந்தைக்கு அரிய வகையான உடல்நலக் குறைபாடு இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து, தனது குழந்தையை காப்பாற்றவும், அந்தக் குறைபாட்டை குணப்படுத்தவும் அவர் மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

குடும்பப் பாசம், தந்தை–மகள் உறவு, மருத்துவப் போராட்டம் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.

இதனிடையே, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement