• Oct 16 2024

4 நாட்களில் இத்தனை கோடி வசூலா? அதிகார்வபூர்வமாக வெளியான அறிவிப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்திய படமாகவே கோட் படம் வெளியானது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்திருந்தது.

கோட் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கடந்த ஐந்தாம் தேதி உலக அளவில் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை அழித்து வருகின்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதிலும் விஜய் - திரிஷா இணைந்து ஆட்டம்  போட்ட மட்ட பாடலை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றார்கள்.


கோலிவுட்லையே முதல் நாளில் நூறு கோடி ரூபாய் வசூலித்த இரு படங்களின் சொந்தக்காரராக விஜய் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஏற்கனவே அவருடைய லியோ படமும் முதல் நாளிலேயே 148 கோடிகளை வசூலித்து இருந்தது.

இந்த நிலையில், தற்போது கோட் திரைப்படத்திற்கான நான்கு நாட்களுக்கான வசூல் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நான்கு நாட்களில் 288 கோடிகளை வசூலித்துள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோட் திரைப்படம் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிலேயே காணப்படுகிறது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி வருகின்றார்கள். தெலுங்கில் இந்தப் படம் போதிய ரசிகர்களை ஈர்க்காத நிலையில் கேரளா போன்ற இடங்களில் ரசிகர்கள் தமது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.


Advertisement