• Jan 19 2025

தலைவருக்கு என்ன எனர்ஜி? இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் வேட்டையன்! ரசிகர்கள் கொண்டாட்டம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் அனிருத் காமினேஷனில் வெளியான ஜெயிலர் படத்தில் பாடல்கள் அதிரடியாக காணப்பட்டது. இதில் வெளியான அத்தனை பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்திருந்தார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்பு அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி ஆனது. அதன் பின்பு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.


இந்த நிலையில், தற்போது வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், அனிருத் இணைந்து கலகலப்பாக ஆடி உள்ளார்கள். இந்தப் பாடல் வெளியாகி ஒரு சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான வியூவஸ் குவிந்துள்ளது.

இந்தப் பாடலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா வாசுதேவன் ரஜினிக்காக வாய்ஸ் கொடுத்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதனை பட குழுவினர் சாத்தியப்படுத்தி உள்ளார்கள்.

மேலும் இந்த பாடலை பார்த்த ரஜினி பேன்ஸ் தலைவருக்கு 74 வயசிலும் என்ன எனர்ஜி இவருக்கு எல்லாம் டீ ஏஜிங் தேவையே இல்லை என்று தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.




 

Advertisement

Advertisement