• Oct 16 2024

சூர்யா - விஜய் தங்களோட கர்ப்ப காப்பாத்த ரொம்பவே கஷ்டப்பட்டாங்க..! சர்டிபிகேட் கொடுத்த சுசி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாடகியாக மட்டுமில்லாமல் ரேடியோ ஜாக்கியாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் சுசித்ரா. இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடினார். ஆனாலும் ஒரு கட்டத்தில் சுச்சி லீக்ஸ் என்ற விவகாரத்தின் மூலம் சிறிது காலம் தலை மறைவாக இருந்தார்.

அதன் பின்பு சமீபத்தில் மீண்டும் தனது லீலைகளை ஆரம்பித்துள்ளார்.  தனுஷ், ஐஸ்வர்யா, விஜய், திரிஷா, ஹன்சிகா, அண்ட்ரியா, அனிருத், ஷாருக்கான் சுசியின் முன்னாள் கணவரான கார்த்திக் குமார்  ஆகியவர்களை பற்றி பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டு தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்து இருந்தார்.

இந்த நிலையில், ஹோலிவுட்டில் மிஸ்டர் கிளீன் நடிகர்கள் என்றால் அது சூர்யா - விஜய் தான் என பாராட்டி பேசி உள்ளார் சுசித்ரா. தற்போது இந்த விஷயம் வைரலாகி வருகின்றது.


சினிமாவில் பல நடிகர், நடிகைகள் பற்றிய அந்தரங்க செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார் சுசித்ரா. இதனால் பாடும் வாய்ப்புகளையும் இழந்தார். தற்போது மீண்டும் சேனல்களுக்கு நடிகர், நடிகைகளின் சொந்த விஷயம் பற்றி பரபரப்பாக பேசி வருகின்றார்.

அதன்படி தற்போது நடிகர் சூர்யா - விஜய் பற்றி பேசியுள்ளார். அதில் அவர்கள் இருவரும் தங்களை யாரும் தொடவிடாமல் தங்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக விஜய் வீட்டில் பார்ட்டி நடந்தால் கூட அவர் தனியாகத்தான் இருப்பார் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement