• Sep 10 2026

மதுரையில் ரசிகர்களுடன் ஜிகர்தண்டா பருகிய சிவகார்த்திகேயன்!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘சேயோன்’.

மதுரையை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்புக்கு இடையிலான ஓய்வு நேரத்தில், மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள பிரபல ஜிகர்தண்டா கடைக்கு சிவகார்த்திகேயன் திடீரென சென்றுள்ளார்.

அவர் அங்கு வந்த தகவல் பரவியதும், ரசிகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் அவரைச் சுற்றி திரண்டனர்.

அப்போது ரசிகர்களிடம் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் சிவகார்த்திகேயன் உரையாடினார். அங்கிருந்த ஒரு குழந்தைக்கு அன்புடன் முத்தமிட்ட அவர், அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் ஜிகர்தண்டாவும் வாங்கிக் கொடுத்துள்ளார்.


மேலும், பொதுமக்களுடன் இயல்பாகப் பேசியபடி ஜிகர்தண்டா பருகிய சிவகார்த்திகேயனின் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

நடிகரின் இந்த எளிமையான அணுகுமுறையையும் அன்பான செயலையும் பார்த்து மதுரை ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement