• Oct 01 2026

யாரும் எதிர்பார்க்காத லுக்கில் க்ரித்தி ஷெட்டி.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் செம வைரல்.!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் க்ரித்தி ஷெட்டி. தெலுங்கில் அறிமுகமாகி தனது அழகும், இயல்பான நடிப்பும் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முக்கியமான கதாநாயகியாக வலம் வருகிறார்.


க்ரித்தி ஷெட்டிக்கு திரைப்படங்களைத் தாண்டியும் சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். 

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.


இந்தப் புகைப்படங்களில் க்ரித்தி ஷெட்டி மிகவும் கியூட்டான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். அவரது அழகான லுக் மற்றும் ஸ்டைலிஷான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் தங்களது லைக்குகளையும், கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

மேலும், க்ரித்தியின் இந்த புதிய புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் அவை தற்போது வேகமாக வைரலாகி வருகின்றன. இதன் மூலம் மீண்டும் தனது அழகால் இணையத்தில் டிரெண்டாகி வருகிறார் க்ரித்தி ஷெட்டி.

Advertisement

Advertisement