• Jan 19 2025

ஸ்ருதியை காறி துப்பிய மீனா, ரோகிணி.. என்ன நடந்தது? வைரல் வீடியோ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பெற்று இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் 3 நாயகிகளாக கோமதி பிரியா, சல்மா மற்றும் ப்ரீத்தி ரெட்டி ஆகியோர் நடித்து வரும் நிலையில் மூன்று கேரக்டர்களுக்கும் அவ்வப்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதும் இதனால் இந்த சீரியலின் ஹீரோயின் யார் என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு திரைக்கதை அனைவருக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் சின்ன சின்ன கேரக்டருக்கு கூட அசத்தலான காட்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் ஒவ்வொரு நாளும் வெளியாகும் முன்னோட்ட வீடியோக்களும் சீரியலின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் மீனா, ரோகிணி மற்றும் ஸ்ருதி ஆகிய மூவரும் இணைந்த ரீல்ஸ் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் சாம்பார் ஊத்திகிட்டு இருக்கிறது என் ஆளு என்று ரோகிணி கூற, அதுக்கும் அங்கிட்டு ரசம் ஊத்திக்கிட்டு இருக்கே அது என் ஆளு என்று மீனா கூற, அதற்கு அங்கிட்டு எச்சிலை எடுத்துகிட்டு இருக்கே அது என்  ஆளு என்று ஸ்ருதி கூற, ஸ்ருதியை நோக்கி இருவரும் காறி துப்புகின்றனர். இந்த காமெடி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement