• Jan 19 2025

நம்ம பிக்பாஸ் ஷிவானியா இது? இவ்வளவு ஸ்லிம் ஆகிட்டாங்களே.. ஆனா இது மட்டும் போதாது..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஷிவானி நாராயணன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் சேர்ந்து ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷிவானி இவ்வளவு ஸ்லிம் ஆகிவிட்டாரே என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

’பகல் நிலவு’ என்ற சீரியலின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் அதன் பிறகு ’சரவணன் மீனாட்சி’ ’ராஜா ராணி’ ’ரெட்டை ரோஜா’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார் என்பதும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 98 வது நாள் வெளியேறினார் என்பதும் தெரிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ’விக்ரம்’ ’வீட்ல் விசேஷங்க’ ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானி சில படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்களை வைத்திருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் நிலையில் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் சற்று முன் தனது அம்மாவுடன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து நம்ம ஷிவானியா இது? இவ்வளவு ஸ்லிம் ஆகிவிட்டாரே என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் வெறும் ஒர்க்கவுட் செய்தால் மட்டும் போதாது, கொஞ்சம் நடிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும், கூத்துப்பட்டறை அல்லது நடிப்பு பயிற்சி பள்ளிக்கு சென்று நடிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் காமெடியாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ஷிவானி நாராயணனின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement