• Jan 18 2025

கவின் நடிப்பை பார்த்து மிரண்ட சிம்பு! நெகிழ்ச்சியாக அவர் கூறிய அந்த வார்த்தை

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திறமையின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதிக்கும் நடிகர்கள் உள்ளனர். அவ்வாறு சமீபத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


கவின் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமே பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்த டாடா திரைப்படம் இவரது திரைப்பயணத்திற்கு நல்ல ஆரம்பமாக அமைந்தது. இந்த நிலையிலேயே இவர் அடுத்ததாக நடிக்கும் ஸ்டார் திரைப்படத்தை பார்த்த நடிகர் இவரை பாராட்டியுள்ளார்.


எலன் இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படம் ஸ்டார் ஆகும். இதன் ட்ரைலரானது சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை முன்னோட்டமாக நடிகர் சிம்புவுக்கு போட்டுக்காட்டி உள்ளனர். அதை பார்த்த சிம்பு "கவின் மிகவும் நன்றாக நடிக்கின்றார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு மிகவும் ஜதார்த்தமாக நடிக்கின்றார்" என பாராட்டியாக ஸ்டார் திரைப்படத்தின் இயக்குனர் எலன் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement