• Dec 03 2024

கிரிக்கெட் புயலை பார்க்கச்சென்ற நடனப்புயல்! பிரபு தேவா லேட்டஸ்ட் பிக்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமான ஐபில் தொடருக்கென்றே தனி மக்கள் கூட்டம் ரசிகர்களாக உள்ளனர். அவ்வாறே சினிமா பிரபலங்களும் கிரிக்கெட்டை ரசிக்கின்றனர். இதனால் யாராவது ஒரு நடிகர் கிரிக்கெட் பார்க்க ஸ்டேடியம் செல்வது வைரலாகின்றது.


நடன இயக்குனராக இருந்து பின்பு நடிகராக மாறியவர் பிரபுதேவா ஆவார். இன்றளவிலும் இவரது நடனத்திற்கென்றே இந்திய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் நாட்டு மக்களால் நடனப்புயல் என அழைக்கப்படும் இவருக்கு இந்தியன் மைக்கல் ஜாக்சன் என்ற இன்னொரு பெயருக்கும் உள்ளது.


இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் ஐபில் தொடரை நேரில் காண்பதற்காக கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு சென்றுள்ளார். இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியை காணவே சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement