தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பலமொழிகளிலும் நடித்து பிரபலமாக காணப்படும் நடிகை தான் சாய் பல்லவி. தமிழில் இவருடைய நடிப்பில் இறுதியாக அமரன் படம் வெளியானது.
அந்தப் படத்தில் சாய் பல்லவியின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டது. அமரன் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அவருடைய சம்பளமும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.
d_i_a
இதை தொடர்ந்து ஹிந்தியில் கால் பதித்துள்ளார் சாய்பல்லவி. அதன்படி ராமாயணம் படத்தில் சீதையாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ராமராக ரன்பீர் கபூரும், கே ஜி எஃப் புகழ் நடிகர் யாஷும் நடித்து வருகின்றார்கள்.
மேலும் சாய் பல்லவி - நாக சைதன்யா இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. அதில் சாய் பல்லவியும் நாக சைதன்யாவும் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்கள்.
இந்த நிலையில், தண்டேல் ப்ரோமோஷன் விழாவின் போது சாய் பல்லவி நாக சைதன்யாவுக்கு நடனம் ஆட கற்றுக் கொடுத்துள்ளார். தற்போது இத்தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆனாலும் நாக சைதன்யா மேடையில் ஆடுவதற்கு கூச்சப்பட்டு ஒரு சில ஸ்டேப் போட்ட நிலையில் இறுதியில் சாய் பல்லவியிடம் கை எடுத்து கும்பிட்டு எஸ்கேஎப் ஆகியுள்ளார். இதோ அந்த வீடியோ..
Listen News!