• Feb 03 2025

ARUN அப்பா கிட்ட கல்யாணத்துக்கு ஓகே வாங்குன Moment.! அர்ச்சனாவுக்கு செம கெத்து தான்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் அருண் பிரசாந். இவர் அதற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்து கொண்டார். இந்த சீசனில் மிகவும் அமைதியாகவே காணப்பட்டார்

இதனால் இவர் நடிக்கின்றார் என்றும் இவருடைய உண்மை முகத்தை காண முடியவில்லை என்று போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தமது விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அத்துடன் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அங்கு வந்த அர்ச்சனாவை தனது காதலி என உலகறிய அறிமுகம் செய்து வைத்தார்.

ஏற்கனவே அர்ச்சனாவும் அருணும் காதலித்ததாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அதற்கு மௌனம் காத்தனர். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்து தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகவே கூறியிருந்தார் அருண். அதன் பின்பு இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், அருண் தனது பெற்றோர், அர்ச்சனாவுடன்  கலந்துகொண்டு வழங்கிய பேட்டி தற்போது வைரல் ஆகி வருகின்றது. அதில் அருண் அர்ச்சனாவை காதலிப்பது பற்றி எங்களுக்கு சொல்லவில்லை என்றும் ஒருநாள் திடீரென வந்து ஆசீர்வாதம் வாங்கியதாகவும் அருளின் அப்பா தெரிவித்துள்ளார்.


மேலும் நானும் அருண் அம்மாவும் இதுவரையில் ஒரு விஷயத்தை கூட அவரிடம் மறைத்து வைத்தது இல்லை. ஆனால் அருண் காதலிக்கும் விஷயத்தை எங்களிடம் இருந்து மறைத்து விட்டார். இதை நாங்கள் கொஞ்சம் கூட  எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல, 

அங்கிருந்து அருண் சில விடயங்கள் நல்ல நேரம் பார்த்து தான் சொல்ல வேண்டும் என்று, நான் அர்ச்சனா என்ற பெண்ணை காதலிக்கின்றேன் உங்களுக்கு சம்மதமா என அந்த மேடையிலேயே வைத்து கேட்டுள்ளார்.

அதற்கு அவர்களுடைய பெற்றோரும் சம்மதம் தெரிவித்து இருந்தார்கள். மேலும் தனது தாய் சுகவீனமாக இருந்த போது அர்ச்சனா  தான் முதன் முதலாக வந்து பார்த்து அவரை ஹாஸ்பிடல் அழைத்து சென்றதாகவும் அவருடைய அம்மா தெரிவித்து இருந்தார். தற்போது இவர்கள் வழங்கிய பேட்டி வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement