• Jan 18 2025

தனது அம்மாவை ஜெயிலில் தள்ளிய ரோகிணி..? க்ரிஷ் பற்றிய மர்மத்தை கண்டறியும் முத்து

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி தனது அம்மாவையும் க்ரிஷையும் புது வீட்டுக்கு கூட்டி வந்து அங்கு பால் காய்ச்சி அவர்களை இருக்கவைக்கின்றார். மேலும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது, கதைவை பூட்டி வைத்தே இருக்க வேணும்,  பக்கத்து வீட்டுக்காரர்களோட பேசக்கூடாது என்று தனது அம்மாவுக்கு ரூல்ஸ்மேல் ரூல்ஸ் போடுகின்றார்.

மேலும் வீட்டுக்கு தேவையான சாமான்களை நான் வாராவாரம் வாங்கி வருகின்றேன். நீ எதற்கும் வெளியே போக வேண்டாம் என்று சொல்லுகின்றார். அதன் பின்பு க்ரிஷையும் வெளியே போய் விளையாட கூடாது என்று சொல்லுகின்றார். இதுக்கு நாங்க ஜெயிலில் இருந்து இருக்கலாம் என ரோகிணியின் அம்மா சொல்லுகிறார்.

d_i_a

இதை தொடர்ந்து கிரிசை ஸ்கூலில் சேர்ப்பதற்காக ரோகினையும் அவருடைய அம்மாவும் க்ரிஷும் செல்கின்றார்கள். அந்த நேரத்தில் அண்ணாமலையும் அங்கு வேலைக்காக செல்கின்றார். அண்ணாமலையை இரண்டு வாரங்கள் கழித்து வருமாறு அவருடைய தகவல்களை வாங்கி விட்டு அனுப்புகின்றார்கள்.

எனினும் இவர்களை இருவரும் சந்திக்கவில்லை. பிள்ளையை ஸ்கூலை சேர்த்துவிட்டு ஸ்கூல் முடிஞ்சதும் பஸ்ஸில் ஏறி கவனமா வர வேண்டும் என்று க்ரிஷுக்கு ரோகிணி சொல்லுகின்றார். 


இன்னொரு பக்கம் ரோகினியின் அம்மா வீட்டு பக்கம் சவாரி போன முத்து அவர்களுடைய வீட்டை போய் பார்க்கின்றார். ஆனால் வீடு பூட்டி இருப்பதால் ரோகினி அம்மாவுக்கு கால் பண்ண, அங்கிருந்த ரோகினி தனது அம்மாவிடம் இப்படித்தான் பேச வேண்டும் என்று சொல்கின்றார்.

அதன்படியே அவரும் நாங்கள் வேற ஊருக்கு வந்து விட்டோம் இனிமேல் கால் பண்ண வேண்டாம் என்று முத்துவுக்கு சொல்லுகின்றார்கள். அதன் பின்பு வீட்டுக்கு போன முத்து, மீனாவிடம் நடந்தவற்றை சொல்ல, இதை கிச்சனுக்கு வெளியே இருந்து ரோகிணி கேட்கின்றார். 

அத்துடன் நாம க்ரிஷ் கூட பேசுறது அவங்க அம்மாக்கு இல்ல வேற யாருக்கோ பிடிக்காம இருக்குது போல என்று சந்தேகப்படுகின்றார். இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement