• Jan 18 2025

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவா இது? அவரே வெளியிட்ட வீடியோ படு வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவி சீரியல்கள் நடித்து பிரபலமானார். அதன் பின்பு பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணி மேலும் பிரபலம் அடைந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்தவர்தான் அர்ச்சனா. அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா நுழைந்த பிறகு தான் ஆட்டம் சூடு பிடித்தது எனலாம். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து அழுதது மட்டும் இல்லாமல் தான் வெளியே போகப் போகின்றேன் என்று புலம்பிக்கொண்டே இருப்பார். ஆனால் அதற்குப் பிறகு இவருடைய ஆட்டம் வேற மாதிரி இருந்தது.

d_i_a

இதைத் தொடர்ந்து அர்ச்சனாவின் உண்மை, நீதி, நேர்மை என்பவற்றை பார்த்து அவருக்கு அமோக ஆதரவை மக்கள் கொடுத்தார்கள். அத்துடன் ரெக்கார்ட் கொடுத்து வெளியே  அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனியின் ரசிகர்களின் ஆதரவும் அர்ச்சனாவுக்கு தான் குவிந்தது. இதனால் அவர் பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை ஈசியாக வெற்றி பெற்று வெளியேறி இருந்தார்.


இதை அடுத்து டிமான்டி காலனி 2 படத்தில் முக்கிய கேரக்டரில் அர்ச்சனா நடித்திருப்பார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 100 கோடிகளை தாண்டி இருந்தது.

இந்த நிலையில், அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது 27 ஆவது பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement