மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சினிமா மட்டுமின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளார்.
இதை தொடர்ந்து ஜிம் மாஸ்டர் ஆன லோவல் தபால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.
மேலும் திருமணம் முடித்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் கொண்டாடுவதற்காக சென்றார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக காணப்படும் ரம்யா பாண்டியன் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழமையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஹனிமூன் சென்ற இடத்திலும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ரம்யா பாண்டியன். ஆனால் ஹனிமூன் சென்ற இடத்தில் கணவருடன் போட்டோ எடுக்காமல் சிங்கிளாக போட்ட ஷூட் நடத்தி உள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
மேலும் ரம்யா பாண்டியன் பதிவிட்ட புகைப்படங்களில் ஐந்தாவது புகைப்படம் தனது HEARTTTT என குறிப்பிட்டு நாய் குட்டிகளுடன் இருக்கும் புகைப்படத்தையும், கடைசி புகைப்படம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நினைவூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Listen News!