தென்னிந்திய சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகையாக த்ரிஷா காணப்படுகின்றார். அஜித், விஜய், சூர்யா, டோவினோ தாமஸ் என தொடர்ந்தும் முன்னணி நடிகர்களுடன் இளமை மாறாமல் நடித்து வருகின்றார்.
இப்போது உள்ள ஹீரோயின்களுக்கே டாப் கொடுக்கும் வகையில் த்ரிஷா காணப்படுகின்றார். 35 வயதை கடந்த போதும் திரிஷாவுக்கு உரிய மார்க்கெட் இன்னும் சரியவில்லை. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. இதை தொடர்ந்து கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு மட்டும் விஜயுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருந்தார்.
தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் அஜித் குமார் கோட் ஷுட்டிலும் த்ரிஷா அழகிய சேலையிலும் இருந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை வெகுவாக கவர்ந்திருந்தது. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் கமிட் ஆன நடிகைகள் சிம்பிளாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அதில் த்ரிஷா துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கின்றார். அவருடன் விடாமுயற்சி படத்தில் இறுதியாக இணைந்த ரம்யாவும் காணப்படுகின்றார். இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!