மகாராஜா படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் சாச்சனா. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து இருப்பார். தனது முதலாவது படத்தின் மூலமே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
மகாராஜா படத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டார் சாச்சனா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதன்படி பிக் பாஸில் சிறப்பாக விளையாடிய சாச்சனா இறுதியில் எதிர் பாராத விதமாக எலிமினேட் ஆகி இருந்தார். இவருக்கு 12 லட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
சாச்சனா நடிப்பை மட்டும் நம்பி இல்லாதவராக காணப்படுகிறார். இவர் ஏற்கனவே ஐடி கம்பெனி ஒன்றில் பணி புரிந்ததாகவும் தனக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் தான் நடிக்க செல்வதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாச்சனா சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிப்பதாக கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Listen News!