• Jul 01 2024

ராகவா லாரன்ஸை கவிழ்க்க 2 முன்னணி நடிகர்கள் திட்டம்.. தாக்கு பிடிப்பாரா?

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு நடிப்பு அரக்கன்கள் இணைய இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களது நடிப்புக்கு ஈடு கொடுத்து ராகவா லாரன்ஸ் தாக்கு பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒன்று லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக்கி வரும் ’பென்ஸ்’ என்ற திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்தது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ மற்றும் கார்த்தி நடித்த ’சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.



இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது வில்லன்களாக எஸ்ஜே சூர்யா மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும், ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் அவரது தொழிலை கவிழ்ப்பதற்கு இரண்டு வில்லன்களும் சதி செய்கிறார்கள் என்றும் அந்த சதியிலிருந்து ராகவா லாரன்ஸ் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா மற்றும் மலையாள திரையுலகின் நடிப்பு அரக்கன் பகத் பாசில் ஆகிய இருவரும் ராகவா லாரன்ஸ் படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement