• Jan 19 2025

ஏன் வயிறு எரிகின்றீர்கள்? விஜய் செய்தது சாதாரண விஷயம் இல்லை! பிரபலம் கொந்தளிப்பு

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் விஜய், அண்மையில் தமிழக வெற்றிக்  கழகம் என்ற பெயரில் கட்சியை  ஆரம்பித்திருந்தார். இந்த கட்சியின் வளர்ச்சிக்காக செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பொது பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நேரடியாகவே மக்களுக்கு ஆறுதல் கூறியது என சமூகத்தில் நடக்கும் நல்லது கேட்டதுகளுக்கு நேரடியாகவே பங்கு கொண்டு வருகின்றார் விஜய்.

இன்றைய தினம் 10 மற்றும் 12 பொதுப் பரிட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்து ஊக்கத்தொகை பரிசுகள் என்பவற்றை கொடுத்து மாணவர்களை மகிழ்வித்துள்ளார் விஜய். இதற்கு பல ரீதியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், விஜயின்வீடியோக்கள் ட்ரெண்ட் ஆகி வரும் இந்த விஷயம் தொடர்பில் வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், இந்த சமுதாயத்தை அதே இடத்தில் வைத்திருக்க வேண்டும் . அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று அரசியல் கட்சிகளும், நடிகர்களும் மிகத் தெளிவாக இருப்பார்கள். ஆனால் அங்கிருந்து வந்த விஜய் இன்று அரசியல் கட்சி தொடங்கி தனது தொகுதியில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்து கல்வி உதவித்தொகை வழங்குவது, பரிசு அளிப்பது என்று அவர்களை ஊக்கப்படுத்தி மிகச்சிறந்த பணிகளை செய்து வருகின்றார்.

இதற்கு பின்னணியில் அரசியல் இருக்கு என்று பலர் சொன்னாலும் கூட இன்றைக்கு விஜய் மாணவ, மாணவிகளை அழைத்து உதவி செய்துள்ளார். விஜயை பார்த்த மாணவர்களின் முகத்தில் அவ்வளவு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது.

இந்த விஷயத்தை ஏன் எந்த அரசியல் கட்சிகளும் செய்ய முன்வருவதில்லை. இலவச வெட்டி, புடவை கொடுக்கும் இவர்கள் ஒரு மாவட்டத்தில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஏன் உதவமுன் வருவது இல்லை.

ஆனால் விஜய் இதை செய்து வருகின்றார். அவர் அரசியலுக்காக செய்தாலும் சரி ஓட்டுக்காக செய்தாலும் சரி இளம் மாணவர்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கின்றார். இதை ஏன் விமர்சனம் செய்கின்றீர்கள். விமர்சனம் செய்வதற்கு ஆயிரம் காரணம் இருக்கு. ஆனால் கல்வி, உதவி என்று வரும் போது தயவு செய்து அதை விமர்சிக்காதீர்கள்.

234 தொகுதியில் இருக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் அனைவரையும் ஒன்று கூட்டி அவர்களுக்கு சாப்பாடு, பாதுகாப்பு, தங்க வைப்பது என ஒவ்வொரு விஷயமும் சாதாரண விஷயம் இல்லை இதை கைதட்டி பாராட்டாமல் விஜயை பார்த்து ஏன் வயிறு எரிகின்றீர்கள் என வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement