• Jan 19 2025

கோபிட நிலைமைக்கு காரணம் நீங்க தான் ராதிகா! ஏமாற்றத்தில் ஈஸ்வரி! பாக்கியாவுக்கு சப்ரைஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கோபியும் செழினும் ஜாக்கிங் செல்ல, நீ முன்னாடி போ நான் பின்னாடி வாரேன் என கோபி ஏதோ ஒரு சிந்தனையில் நடந்து சென்று விழ பார்க்கிறார்.

அதன் போது எழில் தாங்கிப் பிடிக்கிறார். அதை யார் என்று பார்க்காமலே தேங்க்யூ சார் தேங்க்யூ சோ மச் என சொல்லி கடைசியில் அவரைப் பார்த்தால் அவர் எழில்.

அதற்கு எழில், என்ன அப்பா பார்த்து வர மாட்டீங்களா? கால கொஞ்சம் பாருங்களேன், லேஸ் கட்ட இல்லை என்று லேஸை கட்டி விடுகிறார். இதனால் பிள்ளைகள் எல்லோரும் தன்னை விட்டுக் கொடுக்காமல் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார் கோபி.

இதையடுத்து வீட்டிற்கு போனதும்,  ஓடி ஓடி உழைச்ச நீ இப்போ இப்படி உட்கார்ந்து இருக்கிறத பார்க்க கஷ்டமா இருக்கு என்று சொல்லி, ராதிகாவையும் கூப்பிட்டு நகைகளை கொடுக்கிறார் ஈஸ்வரி.


ராமமூர்த்தியும் இதை வச்சி பிரச்சினைகளை தீர்க்க பாருங்க என சொல்ல, ராதிகா ஈஸ்வரியிடமே நகைகளை திரும்ப கொடுத்துவிட்டு அவர் ஏற்கனவே ஆபிஸ் மூடின கவலைல  உடைந்து போய் இருக்காரு, இப்ப உங்க கிட்ட எல்லாம் பணம் வாங்கினால் இன்னும் உடைஞ்சி போயிருவாரு, சந்தோஷத்தில் கூட நின்று சந்தோஷப்படனும் கஷ்டத்துல தனியா நிக்கணும் என்று தானே கல்யாணம் பண்றோம், இதை எல்லாம் நாங்க  பாத்துக்கிறோம் என கோபியை கூட்டிச் செல்கிறார் ராதிகா.

மேலும் பாக்கியாவிடம் இவரை யாரிடமும் கை நீட்ட விடமாட்டேன் என்று சொல்லி செல்கிறார்.

இதை அடுத்து செல்வி, பாக்கியா, அமிர்தா ஆகியோர் கிச்சினில் இருக்க, எழில் வந்து பாக்கியாவின் கண்களை மூடி ரெஸ்டாரன்ட் 

ஓப்பனிங்காக அடிக்கப்பட்ட இன்விடேஷனை எடுத்துக் காட்டி சப்ரைஸ் கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருக்க, ஜெனியும் இங்க இருந்திருந்தால் சந்தோஷத்தில் துள்ளி குதிச்சிருப்பா என ராமமூர்த்தி சொல்ல பாக்கியா வருத்தப்படுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement