• Mar 26 2026

திடீரென தாஜ்மஹால் சென்ற விஜய் டிவி பிரியங்கா.. வித்தியாசமான புகைப்படம்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தாஜ்மஹால் சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் அது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவி உள்பட பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த பிரியங்கா, ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் செட்டில் ஆகிவிட்டார். சூப்பர் சிங்கர், கனெக்சன், அச்சம் தவிர், ஜோடி நம்பர் ஒன், ஸ்டார்ட் மியூசிக், வால், காமெடி ராஜா கலக்கல் ராணி, ராஜு வீட்ல பார்ட்டி, சொல்றியா ஊஊ சொல்றியாஉள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த பல ஆண்டுகளாக விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா சமூக வலைதளத்தில் பிரபலமானவர் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராமில் மட்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் தனது தோழிகளுடன் தாஜ்மஹால் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் அங்கிருந்து அவர் எடுத்துக் கொண்ட வித்தியாசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்ஸ்,  நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது.



Advertisement

Advertisement