• Mar 29 2025

வாழ்க்கையை மாற்றிய " ஆச கூட" பாடல்..! மனம் திறந்து பேசிய பிரீத்தி முகுந்தன்...!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

"ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன். கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் சமீபத்தில் சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'ஆச கூட' ஆல்பம் பாடலில் நடனமாடி பிரபலமானார்.


இந்நிலையில், 'ஆச கூட' பாடலுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பிரீத்தி முகுந்தன் பேசியுள்ளார். 'நான் நடிகை என்ற அடையாளத்தை பெறுவதற்கு நடனம் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது.


'ஆச கூட' பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த அளவுகடந்த பாராட்டு ஆச்சரியமாக இருந்தது.இதனால் பல வழிகளில் வாய்ப்புகள் தேடி வருகிறது.  2024 எனக்கு நம்பமுடியாததாக இருந்திருக்கிறது.


எனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்திலேயே அர்ப்பணிப்புடனும், ஆர்வமுடனும் பணியாற்றும் கலைஞர்களுடன் பணிபுரிவது சிறப்பாக உள்ளது. அடுத்த வருடத்தில் புதிய கதாபாத்திரங்களில் விரைவில் அடுத்த மகிழ்ச்சியான செய்தி அறிவிப்பை தருகிறேன் என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement