புஷ்பா முதல் பக்கத்துக்கு கிடைத்த வரவேற்பை விட புஷ்பா 2விற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள புஷ்பா 2 பெரிய பஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் முதலாம் பாகம் 2021ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில், அனுஷ்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாகம் ஒன்றில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியது போல பாகம் இரண்டிலும் ஒரு கிளெமர் பாடல் இருக்கிறது.
அந்த பாட்டுக்கு அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடிகை ஸ்ரீ லீலா நடனமாடியுள்ளார். சமீபத்தில் வெளியான புஷ்பா 2 ட்ரெய்லர், மற்றும் லிரிக்ஸ் பாடல்கள் என்பன ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் டிசம்பர் 5 திகதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் இணையத்தில் புஷ்பா படக்குழு வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவடைந்ததாகவும் ரிலீசுக்கு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டு இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
Listen News!