பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை காப்பாற்றிய பாக்யா ஹாஸ்பிடலில் இரவு முழுவதும் இருந்து பார்த்துக் கொள்கிறார். அங்கு வந்த செல்வி எல்லாரும் நேரத்துக்கு ஒரு ஒரு மாதிரி இருப்பாங்க உதவி செஞ்சாச்சு வா வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு பாக்கியா அவர் கண் முழித்தும் நான் வருகிறேன் நீ போ என்று அனுப்பி வைக்கிறார்.
பிறகு கோபி ஆபரேஷன் எல்லாம் முடித்து ரூமுக்கு மாற்றியதும் பார்க்க போகலாம் என்று நர்ஸ் சொல்கிறார்கள். அனைவரும் கோபியை பார்த்து பேசுகிறார்கள். இதற்கிடையில் ஈஸ்வரி, கோபியை பார்க்க விடாமல் ராதிகாவை தடுத்து நிறுத்தியதால் ராதிகா மழையில் நனைந்து கொண்டு பீல் பண்ணி வீட்டிற்கு போகிறார்.
ராதிகாவின் நிலைமையை பார்த்ததும் மயூ ரொம்பவே பயப்பட ஆரம்பித்து விட்டார். உடனே அப்பாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்கும் பொழுது ராதிகா அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. இப்பொழுது ஹாஸ்பிடலில் இருக்கிறார், சரியானதும் வீட்டுக்கு வந்து விடுவார் என்று மயூவை சமாதானப்படுத்தி ரூம்குள் போக வைக்கிறார்.
ஹாஸ்பிட்டலில் நடந்த விடையங்களை ராதிகா தனது அம்மாவிடம் சொல்கிறார். நீதான் கோபியின் மனைவி அந்த உரிமையை விட்டுக் கொடுக்காத. நானும் உன் கூட வாரேன் வா போகலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு ராதிகா அழுது கொண்டே இருக்கிறார். பிறகு ஹாஸ்பிடல் வரும் ராதிகாவை ஈஸ்வரி தடுத்து நிறுத்தி என் மகனை பார்க்க கூடாது என்று கூறுகிறார். நிலைகுலைந்து போன ராதிகாவுக்கு பாக்கிய தனியாக கூப்பிட்டு ஆறுதல் சொல்கிறார்.
Listen News!