• Jan 18 2025

ராம் சரணை டம்மியாக்கிய பிரபு தேவா? 'ஜரகண்டி' டான்ஸ் ஸ்டெப் ஒன்றும் சரியில்லை! தெலுங்கு ரசிகர்கள் கொந்தளிப்பு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை உருவாக்கி, பிரம்மாண்ட இயக்குனர் என பெயரை பெற்றவர் தான் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது தமிழை விட தெலுங்கு, ஹிந்தி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அண்மையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR  திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து பாண் இந்திய ஸ்டார் ஆக ராம்சரண் மிகவும் பிரபலமாகி விட்டார்.

தற்போது RRR  திரைப்பட புகழ் நடிகரான ராம்சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் சங்கர். இந்த படத்தின்  'ஜரகண்டி' பாடல் நேற்று முன்தினம் வெளியானது.


இந்த பாடலின் டான்ஸ் கோரியோகிராபராக முன்னணி நடிகரும், நடன கலைஞருமான பிரபுதேவா பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ராம்சரண் நடிப்பில் வெளியான 'ஜரகண்டி' பாடல் தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றும், பிரபுதேவா அவருக்கு சரியான மூவ்மெண்ட் கொடுக்கவில்லை என்றும் ரசிகர்கள் திட்டி தீர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொதுவாக ஷங்கரின் படங்களில் பாடல்கள் மிகவும் பிரமாண்டமாக காணப்படும். உலக அதிசயங்களையே ஒரு பாடலில் அழகாக எடுத்துக் காட்டி இருப்பார்.

ஆனால் தற்போது வெளியான 'ஜரகண்டி' பாடல் 10 கோடி செலவில் பிரமாண்டமாக செட் போட்டு எடுக்கப்பட்டு இருந்தாலும், ரசிகர்களை திருப்தி படுத்தவில்லையாம்.


RRR  திரைப்படத்தில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராம் சரணுக்கு, பிரபு தேவா சரியான ஸ்டெப் கொடுக்கவில்லை, பாடலும் எதிர்பார்த்த அளவில் இல்லை என தெலுங்கு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும்,  கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்களுக்கு  ஏற்ற வகையில் தமனின் இசையும் துள்ளலாக இல்லை என்றும் ராம் சரண் ரசிகர்கள் குறை கூறியுள்ளனர். 

இதேவேளை, இந்த சம்பவம் தமிழ் சினிமாவை அவமதிக்கும் விதமாக உள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement