• Jan 19 2025

பூர்ணி அப்படியான கேரக்டர் கிடையாது.! இது எல்லாமே பேக் ஐடி செய்த வேலை! உயிர் தோழி நந்தினி ஷாக் நியூஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

முன்னாள் 'பிக் பாஸ்' போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் 'பார்க்கிங்' விளம்பரத்திற்காக 'பிக் பாஸ் தமிழ் 7' இல் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய போட்டியாளர் பூர்ணிமா பின்னர் தனது நெருங்கிய கல்லூரி தோழியான இந்துஜா தன்னை புறக்கணித்ததாக தனது ஏமாற்றத்தை மாயாவிடம் பகிர்ந்து கொண்டார்.

இதை தொடர்ந்து இந்துஜாவின் சமூக வலைத்தளங்களை நோட்டமிட்ட ரசிகர்கள் அவர் பூர்ணிமாவை அன் ஃபாலோ செய்து விட்டார் என ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். 


அதேவேளை, பிக் பாஸ் வீட்டிலுள்ள பூர்ணிமாவின் கேரக்டர் பற்றி சில தினங்களுக்கு முன்பு தவறான கருத்துக்கள் பரவி வந்தது.  

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நடிகை பூர்ணிமாவை பற்றி அவருடைய நெருங்கிய தோழி நந்தினி சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

'நான் உண்மையில் அந்த twitter பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தன். அந்த டுவிட்டர் பதிவில் இரண்டு பெண்களுக்கு வீடு கிடைக்கல. ஆனா பதினோரு ஆண்களோடு ஒரு பெண்ணுக்கு வீடு கிடைச்சி இருக்கு. அது மட்டுமல்லாமல் பூர்ணிமா பல பேரை பணம் வாங்கி ஏமாற்றி இருக்கா என பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது.


அதுமட்டுமின்றி, நானும் பூர்ணிமாவோடு வேலை பார்த்தவர்தான் என்று அந்த பதிவில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அது எல்லாமே பொய். அந்த பதிவு போட்ட ஐடியே உண்மை கிடையாது. பேக் ஐடியில் ஒருவர் போட்ட பதிவுதான் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது' என அதிர்ச்சித் தகவல் ஒன்றை கூறியுள்ளார். 

Advertisement

Advertisement