• Feb 01 2026

தமிழை வெட்ட வந்த ரவுடிகள்...காயப்பட்ட மேக்னா! மருத்துவமனையில் நடந்த டுவிஸ்ட்! நமச்சிக்கு ஆப்பு ரெடி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், மேக்னாவும் தமிழும் தனியாக பேசிக் கொண்டு இருக்க, அந்த இடத்திற்கு தமிழை வெட்ட ரவுடிகள் வருகின்றனர். இதன்போது, மேக்னாவை காரில் இருக்க சொல்லிவிட்டு, தமிழ் ரவுடிகளோடு சண்டை போடுகிறார். அப்போது, தமிழை ஒருவர் கத்தி எடுத்து வெட்ட வர அதனை தடுத்து நிறுத்திப் பிடிக்கிறார் மேக்னா.


இதையடுத்து, மேக்னாவுக்கு காயம் ஏற்பட அவரை  மருத்துவமனையில் அட்மிட் பண்ணுகிறார். இதை தொடர்ந்து அவரை பார்க்க வந்த சரஸ்வதி நீங்க போன உயிரை காப்பாத்திக் கொடுத்து இருக்கீங்க.. அவருக்கு மட்டும் ஏதும் ஆகியிருந்தா நான் உயிரோட இருந்து இருக்க மாட்டன் என தாலியை எடுத்து கண்ணில் ஒத்திக் கொள்கிறார்.  


எனினும், மயக்கத்தில் கேட்பது போல அவர் கேட்டுக் கொண்டு இருக்க, நமச்சியும் அந்த இடத்திற்கு வந்து எல்லாம் தெரிந்து விட்டதோ என பயப்படுகிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ... எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். இனி இந்த சீரியல் எப்படி போக போகுது என்பதை....    





Advertisement

Advertisement