முன்னணி இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளிவரும் நிலையில் அவருடைய சகோதரர், அவருடைய உடல்நிலை பற்றி விளக்கமாக பேட்டி கொடுத்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், மீடியாவுக்கு தர்மம் ஒன்று இருந்தது. அதன்படி பத்திரிகையாளர்கள் நடந்து கொண்டார்கள். ஆனால் இப்போது அதை காற்றில் பறக்க விட்டு, வியாபார ரீதியில் அனைவரும் சென்று கொண்டுள்ளனர். இதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.
சினிமாக்காரர்களை குறி வைத்து அவர்களை அசிங்கப்படுத்துகின்றார்கள். சிலர் அவரின் போட்டவிற்கு மாலையை போட்டு கேவலப்படுத்துகின்றார்கள். ஏன் இது போன்ற கேவலமான வேலைகளை செய்கின்றார்கள் என தெரியவில்லை. ஒரு தவறான செய்தி பரவுகிறது என்றால் மீடியாவுக்கு அறிவு இல்லையா? அதனை உண்மையா? பொய்யா? என சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்க மாட்டார்களா ? கண்டதை எல்லாம் செய்தியாக்குவதா?

பாரதிராஜா என்ன சாதாரண மனிதனா? உலகமே கொண்டாடிய ஒரு இயக்குநர். அவருக்கு இவ்வளவு பெரிய அசிங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. கடந்த மூன்று நாட்களாக போன் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு பெயர் மீடியாவா?
எந்த பொய்யான தகவலையும் தயவு செய்து பரப்பாதீர்கள். பாரதிராஜா இப்போது சிங்கம் போல நலமாக இருக்கின்றார். அவருக்கு எந்த குறையும் இல்லை. அவருக்கு சளி தொந்தரவு இருந்ததால் அதற்கு டெஸ்ட் எடுத்தபோது நுரையீரலில் சளி இருப்பது தெரியவந்தது.
அந்த சளியை வெளியில் எடுப்பதற்காக ஒரு கருவியை வைத்து சளியை வெளியே எடுத்து வருகின்றோம். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த ட்ரீட்மென்ட் முடிந்து விடும். தொற்று ஏற்படும் என்பதற்காக அவரை ஐசியூவில் வைத்து ட்ரீட்மென்ட் செய்தோம். ஆனால் அதற்குள் பல வதந்திகள் கிளம்பிவிட்டன. தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் பேசியுள்ளார்.
Listen News!