ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,பிரபு ,பிரசன்னா நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. மேலும் இப் படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
மற்றும் விடாமுயற்சி படத்தின் தோல்வியினால் ரொம்ப சோகத்தில் இருக்கும் தல ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு வெற்றியாக அமையலாம் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் சமீபத்தில் வெளியாகிய Teaser 3.1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் தற்போது படம் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் "முதல் சிங்கிள் ‘ஒ.ஜி. சம்பவம்’ இந்த மாதம் 18-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் படத்தின் இசையமைப்பு வேலைகளை ஜிவி மிகவும் விரைவாக மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதால் fan boy சம்பவம் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!