பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், தனது 60வது பிறந்தநாளில் புதிய காதலியை அறிமுகப்படுத்தியுள்ள தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இவர் நீண்டகாலமாக தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் கவுரி ஸ்ப்ராட்டுடனான் தான் வைத்திருந்த உறவை தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர்களில் அமீர்கானும் ஒருவர். ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை ரசிகர்களுக்குள் எப்போதும் வியப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. குறிப்பாக இவர் 1986ஆம் ஆண்டு தனது முதல் காதலியான ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பின் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர்களின் உறவு முறிந்தது.
அதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு கிருத்திகா ராவ் என்ற இயக்குநரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த பிறகு, 2021ம் ஆண்டு இவர்களின் உறவு விவகாரத்தில் முடிந்தது. இப்பொழுது மீண்டும் காதலித்து வருவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக அமீர்கான் தனது 60வது பிறந்த நாளில் தனது புதிய காதலியை வெளிப்படுத்தியுள்ளமை அவரது ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் இது குறித்து பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இவரது தனிப்பட்ட வாழ்க்கை எப்பொழுதும் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!