தமிழில் முதன்முதலாக ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் திரைப்படம் "மர்மர்" கடந்த வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கதையின் அடிப்படையில் காத்தூர் என்ற கிராமத்தில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களை பற்றியது.
திரைப்படத்தின் கதை நான்கு இளைஞர்களின் பயணத்தை பற்றி. இந்த இளைஞர்கள் தமிழ் நாட்டின் ஜவ்வாது மலையில் உள்ள காத்தூர் கிராமத்தில் பௌர்ணமி தினத்தில் கன்னிமார்கள் குளத்தில் நீராடுவதும் மங்கை என்ற பெண்ணின் ஆவி மக்களை பழி வாங்குவதாக கூறப்படும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படுள்ளது.
இப் படம் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் தான் மீண்டும் ஒரு பேய் கதையினை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ஒரு நகைச்சுவை படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Listen News!