• Jan 07 2026

இந்த சீசன்ல யாருக்குமே அது இல்ல.. எஞ்சிய போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டபோது எந்தவித விறுவிறுப்பும் இன்றி  ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்தது. ஆனால் தற்போது முடியும் தருவாயில் பரபரப்பான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. 

அந்த வகையில்  இறுதியாக  இடம்பெற்ற  ஷோவில்  பார்வதிக்கும் கமரூதீனுக்கு ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார் விஜய்  சேதுபதி. பலர் அவருடைய செயற்பாட்டுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

ஆனாலும் ஒரு சிலர் பார்வதிக்கு அடிபட்ட போது எல்லோரும் கேமாகத்தான் பார்த்தார்கள்.  ஆனால்  சாண்ட்ரா தான்   பார்வதியின்  கோபத்தை  தூண்டி  அவர்களை அநியாயமாக வெளியேற்றி விட்டார் என்று அவர் மீதும் பலி கூறுகின்றனர். 


இந்த நிலையில், பிக் பாஸ்  சீசன் 9ன் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதில்   இவங்க கண்டிப்பாக  கோப்பை எல்லாம் அடிக்க மாட்டாங்க.. சம்பளத்தோட பண பெட்டியை எடுத்துட்டு போறது நல்லது  அப்படி என்று நீங்கள் யாரை நினைக்கின்றீர்கள் என விஜய் சேதுபதி ஹவுஸ்மேட்சிடம் கேட்டார். 

அதற்கு சாண்ட்ரா முதலில் வினோத் கப்ப இல்ல, .பெட்டிய எடுத்துட்டு போறது நல்லது என்று சொல்ல,  திவ்யா அரோரா வந்த வரைக்கும் ஓகே.. அவங்க பெட்டிய எடுத்துட்டு போறது லாபம்..  பெட்டிய எடுத்துட்டு ஓடட்டும் சார் என்று சொல்லுகின்றார். 

அதன் பின்பு சுபிக்ஷா பிக் பாஸ் விக்ரமை சொல்லுகின்றார்.  அவர் கனி போன பிறகு டவுன் ஆகிவிட்டார் என்றும்,  கப்ப அடிப்பேன் என்று சொன்ன அந்த மோட்டிவ் இப்போ இல்லை என்றும் கூறினார்.

இதை கேட்ட விஜய் சேதுபதி நானும் உங்க கண்ணுல  கப்ப தேடுகிறேன் ஆனால்..  இந்த சீசன்ல யாருக்குமே அந்த எனர்ஜி இருக்கிற மாதிரி தெரியல  என்று தெரிவித்துள்ளார்.




  

Advertisement

Advertisement