தமிழில் வெளியான சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் எச். வினோத்.. தற்போது இவருடைய இயக்கத்தில் விஜய் நடித்த படம் தான் ஜனநாயகன். இந்த படம் எதிர்வரும் ஒன்பதாம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டேயும் முக்கிய கேரக்டரில் மமிதா பைஜூயும் நடித்துள்ளனர். தற்போது தீவிரமாக அரசியலில் களம் இறங்கி இருக்கும் விஜயின் படம் என்பதாலும், அவருடைய இறுதி படம் என்பதாலும் இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதன்படி நேற்றைய தினம் வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லரில் அவர் பேசிய டயலாக்குகள் அவருடைய அரசியல் பாதையை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன. மேலும் பெண் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுத்து வளர்க்க வேண்டும் போன்ற கான்செப்ட்டிலும் காணப்பட்டது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக துணை தலைவரும், நடிகையுமான குஷ்பு கொடுத்த பேட்டி வைரல் ஆகியுள்ளது.
அதில் அவர் கூறுகையில், தேர்தல் வருவதால் ஓய்வு ஊதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணத்தை வைத்து தேர்தலில் வென்று விடலாம் என திமுக நினைக்கின்றது. மேலும் ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரத்திற்கும் பாஜகவிற்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார்.
Listen News!