திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் மீண்டும் வெள்ளித்திரையில் ஒன்றிணைய உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் கடந்த வருடம் திருமணம் முடித்துக் கொண்டதனால் படங்களில் நடிப்பதனை தவிர்த்திருந்தனர். அந்தவகையில் இப்பொழுது மறுபடியும் ஒரு புதிய கதையின் மூலம் திரைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஞ்சிமா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "கல்யாணத்திற்கு பிறகு தான், நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு அதிகளவான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இது எங்களுக்கே ஆச்சரியமான விஷயமாக இருந்தது என்றார். மேலும் ஒவ்வொரு கதையும் மிக நுட்பமான முறையில் தேர்வு செய்யும் போதுஎங்களுக்கே இது சரியாக இருக்கும் என்பதில் உறுதி வந்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.
சமீபகாலமாக மஞ்சிமா மோகனை திரையுலகில் அதிகம் காணப்படவில்லை. இதனால் திருமணத்திற்குப் பிறகு, சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிப்பதற்குத் தீர்மானித்துள்ளார். இதன் அடிப்படையில், தற்போது கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
கௌதம் கார்த்திக் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நடிகராக விளங்குகின்றார். இதுவரை அவர் நடித்த படங்கள் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காவிட்டாலும், அவருடைய கதாபாத்திரத்தின் தேர்வுகள் மிகவும் பாராட்டப்பட்டவையாக காணப்படுகின்றது. அத்துடன் இவர்களின் வருகையைப் பல ரசிகர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
Listen News!