• Jan 19 2025

வாழ்க்கை ஒரு வட்டம்.. நயன்தாரா வேண்டாம் என ஒதுக்கிய சசிகுமாருடன் ஒரு படம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் ஒரு மிகப்பெரிய புகழ்பெற்ற திரைப்பட வசனம் ’வாழ்க்கை ஒரு வட்டம் நண்பா, மேல இருக்கிறவன் கீழ வருவான், கீழே இருக்கிறவன் மேல போவான்’ என்பது தான். அந்த வசனம் யாருக்கு பொருந்தியதோ இல்லையோ நயன்தாராவுக்கு பொருந்தி கொள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது..

’சுப்ரமணியபுரம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சசிகுமார் அடுத்ததாக ’நாடோடிகள்’ என்ற படத்தை இயக்க முடிவு செய்தபோது அனன்யா கேரக்டரில் முதலில் நடிக்க நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினார். நயன்தாராவும் அந்த படத்தில் நடித்த ஒப்புக்கொண்ட நிலையில் திடீரென ஒரு சில முன்னணி ஹீரோக்கள் சசிகுமார் போன்ற புதுமுக நடிகர்களுடன் நடித்து உங்கள் இமேஜை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியதை எடுத்து அதன் பின்னர் அந்த படத்தில் இருந்து விலகினார்.



இதனை அடுத்து நானும் ’நாடோடிகள்’ படத்தில் அனன்யா நடித்தார் என்பதும் அந்த படமும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சசிகுமாரை எந்த நயன்தாரா இளக்காரமாக நினைத்து வேண்டாம் என நயன்தாரா ஒதுக்கினாரோ, தற்போது அதே சசிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்

’அன்னபூரணி’ உள்பட தொடர்ச்சியாக தோல்விகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு அந்த படம் தான் தூக்கி விட வேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் விஜய் படம் வசனமான ’வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற வசனம் ஞாபகப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்  பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement