நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் திரு மாணிக்கம். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
திரு. மாணிக்கம் படத்தில் முத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
d_i_a
இந்த நிலையில், திரு. மாணிக்கம் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனப்பூர்வமான பாராட்டை படக்குழுவினருக்கு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அவர் வெளியிட்ட அறிக்கை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது
அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை வருமாறு, ஒரு நல்ல படத்துக்கு அடையாளம் படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு நான்கு நாட்களுக்காவது நினைவில் வைத்துக் கொண்டே இருக்கணும். அந்தப் படத்தில் வரும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்க வேண்டிய எண்ணம் உருவாகனும்.
அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு. மாணிக்கம் என்கின்ற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கி இருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள் தான் ஒரு அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். திரை உலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது.
இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றி இருக்கும் மைனா சுகுமார், விஷால், சந்திரசேகர், குணா ரகு அவர்களுக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் இந்த படத்தை தயாரித்து இருக்கும் ஜிபி ரவிக்குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
Listen News!