மாபெரும் வெற்றியை 2019 இல் வழங்கிய திரைப்படமான "லூசிஃபர்" தற்போது அதன் இரண்டாம் பாகம் "எம்புரான்" என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
முதலாவது பாகத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து "எம்புரான்" படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது மேலும் அது ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் உலகளவில் அசாத்திய வசூல் செய்துள்ளது.
ப்ரீ புக்கிங் மட்டுமே தற்போது ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்யப்பட்டு எந்த ஒரு மலையாளப் படமும் இதுவரை செய்திராத சாதனையை "எம்புரான்" படம் செய்துள்ளது. இதன் மூலம் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகி உள்ளன.மேலும் இந்த படம் ஏறத்தாள 200 அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!