ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை தன்வசமாக்கிய நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட பின்னர் ஹீரோயினாக நடிப்பதை நிறுத்தினார். பின்னர் தொலைக்காட்சி சீரியலின் பக்கம் தனது கவனத்தை செலுத்திய இவர் அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி, சித்தி போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் இவர் தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கவுள்ள "காலனி " எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப் படத்தில் கோட் ,lawyer இது சம்மந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மற்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடத்தின் முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இடையில் ராதிகாவிற்கு மூட்டு வலி சிகிச்சை ஏற்பட்டுள்ளமையினால் நிறுத்தி வைத்து மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகளை படக்குழு ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Listen News!