• Jan 07 2026

ரோகிணிக்கு மீனா கொடுத்த கெடு.. சீதா அம்மாவுக்கு காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த அருண்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில்,  க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலைக்கும் முத்துவுக்கும் சந்தேகம் வருகின்றது. இதனால் க்ரிஷின் பாட்டி எப்போது வருவார்கள் என்று விசாரிக்குமாறு மீனாவிடம் அண்ணாமலை சொல்லுகின்றார். 

இதை தொடர்ந்து ரோகிணியை அழைத்து பேசிய மீனா, எப்போது உண்மையை சொல்லப் போகின்றாய்?  முத்துவுக்கு டவுட் வந்து விட்டது என்றும், இன்னும் 7  நாட்களுக்குள் உண்மையை சொல்லுமாறும் வார்னிங் பண்ணுகிறார்.

இதைப்பற்றி ரோகிணி யோசித்துக் கொண்டு இருக்கும் போது மனோஜ், இன்னும் 7 நாளில் ஷோவ் ரூம் திறந்து ஒரு வருடம் என்றும், ஸ்ருதி இன்னும் 7 நாளில் நான் ரெஸ்டாரண்ட்  திறந்து 100 நாள் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.


அதன்பின் மீனாவின் அம்மா பிறந்த நாளை கொண்டாட இருவரும் அங்கு செல்கிறார்கள். பின்பு மீனாவின் அம்மாவுக்கு புடவையும் காசும் கொடுக்கிறார் முத்து.

அந்த நேரத்தில் அங்கு வந்த அருணும் சீதாவும் புடவையும், மோதிரமும் கொடுக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement