சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி இந்த சிரியலினை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து மிகவும் சூப்பர் ஆக விளையாடி வெளியேறினார். அதன் பின்னர் நீண்டகாலமாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்த இவர் சமீபத்தில் வெளியாகிய " பயர் " திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப் படத்தில் பாலாஜி முருகதாஸ் உடன் மிகவும் நெருக்கமாக நடித்தமையினால் அனைவராலும் விமர்சனத்துக்கு ஆளாகினார். இருப்பினும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொடுப்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என கூறினார். மேலும் பல படங்களில் கமிட்டாகி இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் தற்போது அழகிய புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் "நிழல் உன் பின்னால் விழட்டும் " என கூறி பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. புகைப்படங்கள் இதோ...
Listen News!