• Jan 19 2025

பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனும் பொய்யா? மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு செக்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 176 கோடி ரூபாய் வரையில் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்திருந்ததாக தகவல்கள் வெளியானது.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான எந்த ஒரு படமும் ஹிட் அடிக்காத நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி படு வைரலானது.

இந்த படம் தொடர்பிலான விமர்சனங்களும் சமூக வலைதளங்களை கட்டிப்போட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்ற குணா குகையை பார்ப்பதற்காக பல சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் என படை எடுத்தார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை கமலஹாசன், தனுஷ், ரஜினி உட்பட பலரும் நேரிலேயே அழைத்து பாராட்டி இருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலும் மீண்டும் வைரல் ஆனது.


எனினும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், ஏழு கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாரிப்பாளர்களிடம் விசாரணையும் நடத்தினார்கள்.

இந்த நிலையில், கேரள தயாரிப்பாளர் சங்கம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பல்க் புக்கிங் செய்து பார்வையாளர்களை கவர பொய்யான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பணத்திற்காக பொய்யான விமர்சனங்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வசூலை அதிகமாக காட்டி ஒட்டுமொத்த திரைப்படத்துறைக்கும் தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற நடைமுறையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement