• Jan 19 2025

தளபதி 69ல் களமிறங்கிய குட்டி மகாராணி யாருனு பாருங்க.. பசங்க இப்பவே ஜொல்லு விடப் போறாங்களே!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் இறுதியாக நடிக்கவுள்ள திரைப்படம் தான் தளபதி 69. இந்த படத்தை எச். வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போது இந்த படத்தின் கதை நடிகர் கமலஹாசனுக்கு சொல்லப்பட்ட கதை என்று கூறப்பட்டது. ஆனாலும் விஜயின் இறுதி படம் இது என்பதால் அவருடைய அரசியலைப் பற்றி பேசும் படமாக இது இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் அது விஜய் தான். அதே நேரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக காணப்படுபவரும் விஜய் தான். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கோட் படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. கோட் திரைப்படம் வெளியாக முன்பே லாபம் பெற்றுக் கொடுத்ததாக இதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இப்படியான சூழ்நிலையில் தமிழ் சினிமாவை விட்டு விஜய் விலகி அரசியலில் ஈடுபட உள்ளார் என்பதை நினைத்து ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார்கள். ஆனால் விஜய் இந்த 69ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து  ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தார்.


இந்த நிலையில், தளபதி 69 ஆவது படத்தில் மலையாள நடிகை மமீதா பைஜூ இணைந்துள்ளார். இதனை அதிகாரபூர்வமாகவே பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்த படத்தில் பூஜா ஹெக்டேயும் இணைந்துள்ளார்.

ஏற்கனவே விஜய் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்த பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. அது போல தளபதி 69 படத்திலும் குத்து பாடல் ஒன்று இருக்க வாய்ப்பிருக்கு என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement

Advertisement