• Oct 04 2024

பகத் ஃபாசில் திருடனா? எதிர்பார்த்ததை விட தரமா பிளந்து கட்டிய வேட்டையன் ட்ரைலர்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் இன்னும் எட்டு தினங்களில் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான மனசிலாயோ பாடல் பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. அதில்  ரஜினிகாந்த்தின் நடனமும் மஞ்சுவாரியரின் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில்,  வேட்டையன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் மொத்தமாக நான்கு மொழிகளில் வெளி விடப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. 


மேலும் இரண்டு நிமிடங்கள் 39 நொடிகள் வரை இந்த டிரைலரின் கால அளவு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக படத்தின் மையக் கருவை மட்டும் முக்கியமாக எடுத்துக்காட்டி உள்ளார்கள். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement